Monday, April 27, 2015

ஆரோக்கியமாக வாழ்வது எப்படி?

உணவு ,உடை ,உறையுள் என்பன வாழ்க்கைக்கு மிக மிக முக்கியமான விடயங்களாகும்

இவற்றை அறிவோடும் அளவோடும் வைத்திருந்தால் எமது வாழ்க்கை சொர்க்கமாகும்

கீழே சில அறிவுரைகள் தரப்பட்டுள்ளது 
  • சோடா குறைய ,தண்ணீர் கூட குடித்தல்
  • மதுபாணம் குறைய தேயிலை கூட குடித்தல்
  • சீனி குறைத்து பழவகைகளை கூட சாப்பிடுதல்
  • இறைச்சி வகைகளை குறைத்து மரக்கறி வகைகளை கூட சாப்பிடுதல்
  • வாகணம் ஓட்டுவதை குறைத்து நடையை மேற்கொள்ளல்
  • எந்நேரமும் துக்கத்துடன் முழித்திருக்காமல் சற்று நேரம் நன்றாக தூங்குதல்
  • எந் நேரமும் கோபப்படாமல் சிரிப்பதை அதிகரித்தல்
  • தேவையில்லாமல் அலசுவதை குறைத்து செயல்களில் கவனத்தை அதிகரித்தல்
கடைப்பிடிப்பது கஷ்டம் தான் ஆனால் எந்தவொரு விடத்திலும் அவதானமாக இருங்கள்

Sunday, April 26, 2015

வெற்றி அடைவது எப்படி?

வெற்றி அடைய வேண்டும் என்பது எமது குறிக்கோள் (இலக்கு, இலட்சியம் , குறி , நோக்கம்  , செயல்நோக்கம் , உள்ளெண்ணம் ) ஆக உள்ளது  ஆனால் வெற்றியை இலகுவாகவோ கஷ்டப்பட்டோ   நிறைவேறினால் வெற்றி அடைந்துவிட்டோம் என்று  கூறுகின்றோம்.அந்நேரத்தில் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

ஓர் உண்மை தெரியுது அது யாதெனில் வெற்றி என்பது எதிர் காலத்தினை நோக்கியவாறே உள்ளது எனவே வெற்றி என்பது காலத்தின் கையில் தவழுகின்றதொன்றாக இருக்கிறது.

அது மட்டுமல்லாது மனிதனுடைய வெற்றிற்கு காரணிகளாக அவனது
  • புத்தி
  • மனம்
என்பனவற்றின் செயல்பாடுகளில் வெற்றியினால் ஏற்படும் மகிழ்ச்சி தீர்மானிக்கப்படுகிறது எப்படியெனில்

புத்தியால் ஏற்படும் நன்மைகள்

  • வியாபாரத்தில் வெற்றி
  • பரீட்ச்சையில் வெற்றி
  • பழிதீர்ப்பதில் வெற்றி
  • ஆடம்பர வாழ்க்கையில் வெற்றி

புத்தியால் ஏற்படும் தீமை

 செந்த வாழ்க்கையில் தேல்வியடைந்திருப்பார்கள்.

மனத்தினால் ஏற்படும் நன்மைகள்

  • குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி
  • எதிர்கால சந்ததினருக்கு வழிகாட்டியாக இருத்தல் (அனுபவம்)
  • நிரந்தரமான வெற்றி
  • நண்பர்களை தெளிவாக அறியலாம்.

மனத்தினால் ஏற்படும் தீமை

  • வெற்றியை அடைய பல இன்னல்களை எதிர்நோக்க வேண்டி நிலை
வெற்றி எப்படி?
வெற்றி எப்படி?

Thursday, April 16, 2015

காமத்தை வெல்லுவது எப்படி?

முதலில் காமம் என்றால் என்ன? என்பதை பார்ப்போமானால்.

 இது ஒரு உணர்வு பூர்வமான இச்சையாகும். உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்துக்கும் தங்களுடைய இனத்துடன் இணைந்து (ஆண்,பெண்) தமது காமப்பசியை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றிக் கொள்கின்றன.


மனிதர்களைப்பெறுத்த வகையில் நாட்டுக்கு நாடு இக் காம கலாச்சாரம் வேறுபடுகிறது.இதன் காரணமாக பல சமூகப்பிரச்சனைகள் இடம்பெறுவதற்கும் காரணமாக இருக்கின்றது.

மனிதனுக்கு காம உணர்வு எங்கிருந்து உதயமாகிறது?,எதனால் வருகிறது? என்ற கேள்விக்கு விடை தெரியுமெனில் காமத்தை கட்டுப்படுத்துவது இலகுவான காரியமாகும், எப்படியோ?


 காமத்தை வெல்லுவது மிக இலகுவான காரியம் அல்ல, அது மிகக் கடினமான காரியமாகும்.

 (உ-ம்) :
கோபக்கார முனிவர் என்றழைக்கபடும் விசுவாமித்திரரே காமத்திற்று அடிமையானதால் ,மிக  பாரதூரமான பல் இன்னல்களை சந்திக்க நேர்ந்ததாக வரலாற்றின் மூலம் அறியலாம்.

ஆதிகாலத்திலிருந்தே காமத்திற்கு பல வரையறைககளை மதங்கள் மூலமாகவும் ,இனங்கள் மூலமாகவும் அமைத்திருந்தனர்
திருவள்ளுவர் கூட காமத்திற்கு வரையறைகளை வகுத்துள்ளார் ஆனால் இக்கால கட்டத்தில் பின்பற்றுவர்கள் எத்தனை பேரோ.

காம உணர்வு வருவதற்கான சில காரணிகள்


  • சில உணவு வகையினால் (வெங்காயம்,முருங்கைக்காய்,....)
  • கலாச்சாரம் (மேலேத்தேய)
  • கல்வி அறிவு இன்மை
  • நண்பர்களின் கூட்டு,காமப்பகிடிகள்,கதைகள்
  • சினிமா
  • சுயசிந்தனை அற்றநிலை
  • பெற்றேர்களின் கவனிப்புகள்

எது? எப்படி? இருப்பினும் மனிதன் தன்னுடைய காம உணர்வை  தனக்குத் தெரிந்த வழியில் புனித மனத்துடன் கட்டுப்படுத்தினால்,மாத்திரமே
 காமத்தை வெல்லாம்.