Sunday, May 24, 2015

கலவியின் நன்மைகள் 10 - Benefit of Sex

இந்த இடுகையானது குடும்பத்தவர்களுக்கு பொருந்தும் இருந்தாலும் 18 வயதுக்கு மேற்பட்டோர் வாசித்து ஞாபகப்படுத்திக் கொண்டீர்களானால் பிற்காலத்தில் உதவியாக இருக்கும்

குற்றமற்ற கலவியில் நாள்தோறும் ஈடுபட்டால் ஆண்,பெண் ஆகிய இருவரினதும் உடம்பில் ஏற்படும் மாற்றமானது நன்மையானதா? அல்லது தீமையானதா?
நாள்தோறும் கலவியில் ஈடுபடுவது சாத்தியமா?
போன்ற கேள்விகளுக்கு தகுந்த முறைப்படி கீழே விளக்கப்பட்டுள்ளது.

கலவி என்பது வாழ்க்கையில் ஒரு அவசியமான பகுதியாகும், உடல் உறவு முறையானது காரணத்துடன் இருக்கலாம் அல்லது திருட்டுத்தனமாகவும் இருக்கலாம் எப்படி இருப்பினும் கலவியில் ஈடுபட்ட பின் ஏற்படும் தடையில்லாத நிம்மதியால் உடம்பு எப்படி நன்மையடைகிறது என்பதைப்பார்ப்போம்.

  1. இரத்த ஓட்டம் சீராக்கப்படுவதனால் இருதயத்தின் ஆரோக்கியம் பேனப்படுகிறது
    • மறைமுகமாக முழு உடம்பிற்கும் உடற்பயிற்சி நடைபெறுவதனால்.
  2. பாலியல் உளவழுத்தம் நிம்மதியடைகிறது.
    •  கட்டி அணைப்பதாலும் முத்தம் கொடுப்பதாலும் இரத்த அழுத்தம் குறைவதனால்
  3. நோய் எதிர்ப்புச்சக்தியை ஊக்குவிக்கிறது.
    • குற்றமற்ற கலவியில் ஈடுபடுகையில் உடம்பில் நோய் எதிர்க்கும் அணுக்கள் தானாகவெ உற்பத்தியாகின்றன (Antibodies)  (தடிமன் மற்றும் தொற்றுக்களிருந்து பாதுகாக்க)
  4. எம்மை அறியாமல் சக்தி எரிக்கப்படுகிறது (Calories Burn).  
    • கிட்டத்தட்ட 30 நிமிடத்திற்கு கலவியில் ஈடுபட்டால் 85 ஜுல் தேவைப்படுகிறது ( முழு உடம்பிற்கும் வேலை கொடுப்பதால்)
  5. கண்ணியம் இருவருக்கும் ஊக்கப்படுத்தப்படுகிறது. (Boots Esteem)
    • கலவியில் ஈடுபடும் நேரத்தைப்பொறுத்து அமையும்  (உ-ம்: நேரம் எடுத்து நிம்மதியாகவும் அழகாகவும் உணர்வு பூர்வமாகவும் கலவியில் ஈடுபட்டால் நிச்சயமாக கண்ணியம் பேனப்படும்).
  6. நெருக்கம் செம்மைப்படுத்தப்படுகிறது.(Improve Intimacy)
    • எமது உடம்பு மண்டலம் காதலை (காமம்) உருவாக்கும் ஹோர்மோன்களின் உற்பத்தியின்  உதவியினால் தெளிவான கலவியில் ஈடுபடுதல்
  7. வேதனை , மனத்துன்பம் என்பன இல்லாமல் போதல்
    • மேற்கூறி விடயங்களிருந்து உடம்பு வலி ,தலைவலி போன்ற வற்றிற்கு மருந்தாகிறது
  8. ஆண்களுக்கு ஏற்படும் சுக்கிரியன் சுரப்பி புற்றுநோய் உருவாகும் அபாயம் குறையும் (Prostate Cancer).
    • சுக்கிலத்தை அடக்கிவைத்திருக்காமல் வெளியேற்றம் செய்வதனால் சுக்கியனில் (Prostate ) தோக்கம் இல்லாமல் போவதால் .
    •  மாதத்திற்கு கிட்டத்தட்ட 21 முறை சுக்கிலத்தை வெளியேற்றுவதால் சுக்கிரியன் சுரப்பி நன்றாக வேலை செய்யும் , கிழவனும் அப்பாவாகலாம் .?
  9. இடுப்புத்தசைகளை நன்றாக வலுப்படுத்தலாம்
    • பாலியல் உணர்ச்சியின் நிமிர்த்தம் இடுப்புத்தசைகளின் உதவியினால் கலவியில் ஈடுபாடு
  10. நிம்மதியான தூக்கம் (நித்திரை) (Enhances sleep)
    • கவனக்குறைவில்லாமல் முறையாக கலவியில் ஈடுபட்டபின் நிம்மதியான் தூக்கம் தானாகவெ வரும்

கலவியின் தீமைகள் 10

  1. சுகாதாரமற்ற கலவி - 
    • தொற்றுநோய்களுக்கு விருந்தளித்தல்.
  2. பாதுகாப்பு அற்ற கலவி முறை -
    •  ஆண் உறை ,பெண் உறை அணியாத திருட்டு கலவி
  3. பணம் வீண்விரயமாதல் -
    •  விபச்சாரிகளிடம் தஞ்சம் அடைதல்
  4. குடும்ப பிரச்சனை -
    • ஓன்றுக்கு மேற்பட்டோரிடம் கலவி வைத்திருத்தல்
  5.  கட்டுப்பாடற்ற கலவி -
    •  வீண் சண்டைகள் , நீதி மன்றம், சிறை
  6. உறுப்புக்களுக்கு  ஓய்வு கொடுக்காமை -
    • புற்று நோய் அபாயம் ,செயலிளப்பு
  7.  ஆர்வம் அற்ற நிலை-
    • எந்நேரமும் கலவி சம்பந்தமான விடயங்களில் கவனம்
  8. சிறார்களின் மன பாதிப்பு, வளர்ச்சி  -
    • மிருகங்களைப் போல் செயல்படல்
  9.  நெருக்கம் ,நம்பிக்கை அற்ற நிலை- 
    • பாலியல் அறிவற்ற கலவி தன்னுடை உணர்வுக்கு முக்கியத்துவம்
  10. செல்வாக்கு மானம் என்பன காற்றில் பறத்தல்-
    • நவீன தொழில்நுட்பதினால் திருட்டு ,காரண கலவியை கள்ளத்தனமாக படம்பிடித்து இணையத்தளங்களில் உலாவிடுதல்
வேறு ஏதேனும் இருப்பின் மற்றவர்களுக்கும் Comments Box  ஊடாக அறியத்தரவும்

No comments:

Post a Comment