Monday, May 18, 2015

மனித கல்லீரல் பாதுகாப்பது எப்படி?

மனித கல்லீரல் ஆனது தன்னைதானே புதிப்பித்துக்கொள்ளும் ஆற்றல் உள்ள  ஒரு விசித்திரமான முக்கோண வடிவமுள்ள ,மனித உடலில் உள்ள மிகப் பெரிய உறுப்பாகும். இதன் அளவு ஒரு கால்பந்தளவாகும் (Foot Ball size) ,இது கிட்டத்தட்ட 500 விதமான வேலைகளைச் செய்வதாக மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். அதில்  இரத்தத்தை சுத்திகரிக்கும் தொழிலானது மிக முக்கியமானதாகும்

ஆகவே எமது கல்லீரலை மிக கவனமாக பாதுகாக்கவேண்டிது எமது கடமையாகும்
.

கல்லீரலுக்கு தீங்குவிளைவிப்பவை

  1. பரசிட்டமோல் மாத்திரை (அதிகளவில் உட்கொள்ளப்பட்டால் உயிராபத்து ஏற்படும் இதில் வேறு  600 வகையாக  மாத்திரைகளும்)
  2. மதுபாணம் (ஈரலின் தொழில்பாட்டை குறைத்தல், கல்லீரலில் கொழுப்பு படிவு,ஈரலின் கலங்களை அழித்தல்)
  3. வைரஸ் கிருமி (Hepatitis A,B and C)
  4. சுகாதாரமற்ற பாலியல் உறவு.
  5. கல்லீரல் புற்றுநோய் 
    1. ஈரலில் உருவானவை 
    2. ஈரலுக்கு பரவியவை (Secondary deposit or metastasis )
  6. பித்தக் கற்கள்
  7. உட்கொள்ளும் உணவிலிருந்து அதிகளவான அயன்களை சேமித்துவைத்தல் (Hemochromatosis)
  8. மஞ்சட்காமாலை
  9. விபத்துக்களினால் பாதிக்கப்படல்
  10. சில நோயை குணமாக்க உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் இலை வகைகள்,இலைச்சாறு

அறிகுறிகள் (ஈரலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால்

கல்லீரல் நோய்வாய் பட்டால் எமக்கு உடனடியாக தெரியாது ஏனெனில் ஈரல் நோயானது அமைதியாக இருந்து கொண்டு வளரும் தன்மையுடையது  ஆனால் சில அறிகுறிகள் எமது பழக்கவழக்கங்கள் மூலம் அவதானித்தால் குணப்படுத்தலாம் அவற்றில் சில ,
  • மூட்டுக்களில் வலி
  • பசியின்மை
  • சோர்வான நிலை
  •  நீரழிவு 
  • பாலியலில் நாட்டம் குறைதல்
  • இதயம் வலித்தல்
  • கொலஸ்ரோலின் அளவு அதிகரித்தல்
  • தோல் கடி
  • வயிறு வீக்கம்
  • சிறுநீரின் நிறத்தில் மாற்றம்
  • கண்,தோல் மஞ்சலாதல்

கல்லீரலின் தொழில்கள்

  • உட்கொள்ளப்படும் மதுபாணம்,மருந்துகள் ஆகியவற்றின் விசத்தன்மையை அகற்றுதல்
  • விட்டமீன்களை அயன் வடிவத்திற்கு மாற்றி உடம்பில் சேமிக்கிறது
  • சீனியை குளுக்கோசாக மாற்றி உடலில் சேமிக்கிறது
  • இறந்த செங்குருதி கலங்களை அழித்தல்
  • கொழுப்பை உருவாக்கல்
  • இரத்தத்திலுள்ள கழிவுகளை சுத்திகரித்தல்   பல வேலைகளை செய்கின்றது.

கல்லீரலின் ஆரோக்கிய நிலையை அறியும் வழிகள்

  • இரத்தப் பரிசோதனைகள் (Blood Test)
  • கழி ஒலி மூலம் (USS)
  • ஈரலின் உடல் திசு ஆய்வு .(biopsy)
  • நியூக்கிளியர் ஸ்கான்
ஆகவே எமது ஈரல் பாதுகாக்கவேண்டியது எமது கடமையே

கல்லீரலை பாதுகாக்கும் வழிகள்

  1. உட்கொள்ளும் உணவில் மாற்றம்
  2. பாதுகாப்பான பாலியலில் 
  3. தரமான மதுவகைகளை அளவோடு எடுத்தல்
  4. அன்றாடம் உடற்பயிற்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தல்
  5. ஈரல் சம்பந்தமான மேலதீக விபரங்களை வைத்தியர் மூலமே இணையம் மூலமே அறிதல்
  6. உட்கொள்ளும் மாத்திரையின் பக்கவிளைவுகளை அறிந்திருத்தல்
  7. புற்றுநோய் உடம்பில் பரவும் வழிகளை அறிந்திருத்தல்

No comments:

Post a Comment