Wednesday, May 27, 2015

புற்றுநோயை தடுக்கும் முறைகள் - Cancer prevent method

சில முறைகளால் புற்றுநோய் ஏற்படும் சந்தர்ப்பத்தை இல்லாமல் பண்ணலாம் எனத் தெளிவாகின்றது இவையாவன

  • உணவு
    1.  சத்துள்ள உணவு வகை ,இரும்புச்சத்து,உயிர்ச்சத்து ஏ(எவை யு) நிறைந்ததாயும்,காய்,கறி, பழம் முதலியன சாப்பிடுதல் ,இரும்புச் சத்துத்துள்ள உணவு வகையானவை: முட்டை மஞ்சட்கரு,இறைச்சி,ஈரல்,பச்சை இலை வகை(கீரை), எள்ளு, குரக்கன், பனங்கட்டி,உயிர்ச்சத்து ஏ பால்,மீன்,மஞ்சல் நிறங்கொண்ட காய்கறி(கரட்,பூசனி),பழம்(பப்பாளி,மாம்பழம்) ஆகியவற்றில் அதிகம் உண்டு.
    2. அதிகளவு கொழுப்பு,புரதம் சாப்பிடுவதை தவிர்த்தல் ஆனால் எம் நாட்டில் இது செல்வந்தருக்கு மட்டுமே பொருந்தும் ஏனெனில் ஏனையோர் குறைந்தளவு புரதம்,கொழுப்பு சேர்ந்த உணவையே நாளாந்தம் சாப்பிடுகிறார்கள்.இவர்கள் உட்கொள்ளும் புரதம் இன்னும் கூடுதலாக இருக்கவேண்டும்.
    3. அதிகளவு சூடான உணவு,அதிகளவு சரக்கு கலந்த கறி வகைகள் அதிகளவு உப்பு,உப்பு கலந்த மீன் தவிர்த்தல்
    4. பூஞ்சனம் பிடித்த உணவு வகைகள் முக்கியமாகப் பனங்கிழங்கு,பனம்மா, நிலக்கடலை தவிர்த்தல்
    5. செயற்கையாகத் தயாரித்து அடைத்து விற்கப்படும் உணவுகள் குறைத்தல் அல்லது தவிர்த்தல்.
    6. அதிக இனிப்பு சேர்ந்த பண்டங்கள் தவிர்த்தல்
  • மதுபானம் அருந்துவது ,புகைத்தல்,வெற்றிலை சாப்பிடுதல் முற்றாக ஒழிய வேண்டும்
  •  ஏலுமாயின் தொழிற்சாலைகள் அமைந்த இடங்களில் (Industrial Ares ) குடியிருப்பது தவிர்த்தல்\
  • மருத்துவரின் யோசனை இல்லாமல் தொடர்ந்து மருந்துகள் பாவிப்பது தவிர்த்தல்
  • புற்றுநோயாக மாறக்கூடிய சில நோய்களுக்கு 
  • (உ-ம்: பப்பிலோமா,லியுகோபிளேக்கியா,நீடித்த காலப்புண் ) விரைவில் சிகிச்சை பெறுதல்
  • மேலே குறிப்பிட்ட சில தொழில்கள் புரிபவர்கள் சுகாதார சேவையாளரின் ஆலோசனைப்படி சில நடவடிக்கைகளை கைப்பற்றுதல் அவசியம்.(உ-ம் ) முகமூடி அனிதல்,கையுறை பாவித்தல்,வேலைமுடிந்து குளித்தல்,தயாரிப்பு சாலைகளில் புற்றுநோய் ஏற்படுத்தும் பாதார்தங்களை பாவியாமல் அல்லது அவற்றை மாற்றம் செய்து பாவித்தல்,விளைபொருட்கள் கவனமாக அப்புறப்படுத்துதல் சில முறைகளாகும்.கிருமி நாசினி அடிப்போர் காற்று வீசும் பக்கம் சேர்ந்து அடித்தல் கைகழுவுதல்,குளித்தல்.
புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்
புற்றுநோய் தோற்றத்தில் ஈடுபடும் காரணிகள்


No comments:

Post a Comment