Tuesday, May 19, 2015

மதுபானம் அருந்துவது எப்படி?

இது என்ன புதுவிடயம்? எல்லோருக்கும் தெரிந்தவிடயந்தானே என்று நினைத்துவிடாதீர்கள்.

 உ- ம் :  நாம் உண்ணும் உணவில் கூட சுவை (ருசி),மணம்,பிடித்த கறிகள் ,என்பவற்றை பார்க்கும்போது பசி தானாகவே வரும் அதே நேரம் சாப்பிடும் அளவில் கூட சற்று வித்தியாசம் தெரியும் ஏன்? என்று பார்த்தால் அவ் உணவு சமைக்கப்பட்ட விதமாகும் (அம்மா சமைத்த சாப்பாடு ஞாபகம் வருகிறதா?).

அதே போல் மதுபானத்தையும் அருந்தும் போது சில விஷயங்களை கடைப்பிடித்தால் மதுபானத்தின் உண்மையான சுவையையும் அதன் பலத்தையும் அறியலாம்.

மதுபான வகைகள்

  • வைன் - பழங்களிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது.
  • பியர் - தானியங்கள்,கிழங்கு வகைள்  இருந்து உற்பத்திசெய்யப்படுகிறது.
  • கள்ளு - தென்னை,பனை,கித்துல் மரங்களின் பூவிலிருந்து இயற்கையாக பெறப்படுகிறது 
மேலே குறிப்பிடப்பட்டுள்ள முக்கியமான மதுபானங்களை சிறந்த தொழிநுட்பத்தினால் காய்ச்ச வடித்து வித்தியாசமான மதுபான வகைகள் தயாரிக்கப்படுகின்றன அவை

  • வைன் -  பிரண்டி ஆகவும்
  • பியர் - விஸ்கி,வெட்கா, ரம்  ஆகவும்
  • கள்ளு -  சாராயம் ஆகவும் தாயரிக்கப்படுகிறது.
இவை தவிர சில நாடுகளில் பால்,கற்றாழை,ஒரு வகை மர சக்கை ,தேன் ஆகியவற்றிலிருந்தும் மதுபானம் தாயரிக்கப்படுகிறது.

கீழே  ஒரு கிளாஸ் மதுபானம் அருந்தும் சில முறைகளை தருகிறேன் ,உங்களுக்கு பிடித்த முறையை Comments  ஊடாக தாருங்கள்
  • வைன்,பீர்,கள்ளு என்பவற்றிற்கு எந்தவித கலவையும் கலக்கத் தேவையில்லை நேரடியாக குடிக்கலாம்
  • விஸ்கி வகைகள்
    • ஐஸ் துண்டுகள்
    • ஸ்பிரைட், / சோடா
    • தேசிகாய் துண்டு
    • சீனி சிறிதளவு கலந்து அருந்திப்பாருங்கள்
  • பிரண்டிவகைகள்
    •  சீனி சிறிதளவு
    • தேசி சாறு இருதுளி
    • கொககொலா என்பவற்றை ஓன்றாக்கி அருந்தலாம்
  • ஜின் வகைகள்
    • தோடம் சாறு சிறுதுளி
    • முட்டை வெண் கரு சிறிதளவு
    • தேசிச்சாறு சிறுதுளி என்பவற்றை ஓன்றாக்கி அருந்தலாம்
  • வெட்கா வகைகள்
    • ஹாவி கிறீம் சிறிதளவு (Heavy cream)
    • அன்னாசிப்பழ யூஸ் சிறிதளவு
    • இளநீர்,வழுக்கல்(Coconut Cream)
    • ஐஸ் துண்டுகள் என்பவற்றை ஓன்றாக்கி அருந்தலாம்
  • ரம் வகைகள்
    • வனிலா சிறு துளி
    • ஒரேஞ் யூஸ்
    • ஐஸ்கிறீம் சிறிதளவு  என்பவற்றை ஓன்றாக்கி அருந்தலாம்
மேலே கூறப்பட்டவை விட சிலர் தங்களுக்கென்றே விஷேடமான முறைகளை கையாளுகின்றனர்  எப்படி இருப்பினும் மதுபானம் அருந்துவது ஒரு கலையாகும் அதை அனுபவரீதியாகத்தான் பெறவேண்டும்

3 comments:

  1. Rum with fruit juice.. Try lemon bacardi with maza/slice

    ReplyDelete
    Replies
    1. Yes Its correct, but every one has difference taste here post common things only,Thank you

      Delete