Friday, May 29, 2015

மூளையை ஊக்கப்படுத்துவது எப்படி? Boost Brain power

மூளையை ஊக்கப்படுத்த பல வழிமுறைகள் இருந்தாலும்  உணவின் மூலம் ஊக்கப்படுத்தினால்  மூளையின் தொழிற்பாடு,சக்தி என்பன மென் மேலும் பலம் பெறுவது மட்டுமல்லாமல் உடலின் அனைத்து அவயவங்களுக்கும் ஆரோக்கியத்தையும் ,ஊட்டச்சத்தளிப்பதாகவும் உள்ளது.

இம் முறையானது இலகுவானதும் செலவு குறைந்ததுமாகும்.

உணவில் தான் நமது உடல் ஆரோக்கியம் தங்கியுள்ளது என்பதனை திருக்குறளில் மருத்துவம் என்னும் அதிகாரத்தில் திருவள்ளுவர் அறிவுறுத்தியுள்ளார்.

பெரும்பாலானோர் ஓரேமாதிரியான உணவையே அடிக்கடி உண்பதால் ( நாவின் சுவைக்காக ) அவ்வுணவில் உள்ள மூலப்பொருட்களில் குறிப்பிட்ட ஊட்டச்சத்துக்கள் இருப்பதனால் ஊட்டச்சத்துக்களின் குறைபாடு என்பனவற்றின் தாக்கத்தால் நோய்நொடிகளுக்கு ஆளாவதோடு ஏனைய உறுப்புக்களுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களின் குறைபாட்டினாலும் அவ்வுறுப்புக்கள்  செயல் இழப்பதற்கும் வாய்ப்புள்ளதால்,
 அன்றாடம் உண்ணும் உணவானது வித்தியாசமானதாகவும் அவசியமான அனைத்து ஊட்டச் சத்ததுக்களும் உடலுக்கு சேரும் விதமாகவும் அமையவேண்டும்.

எமது உடலில் உள்ள உறுப்புக்களை எடுத்துக்கொண்டால் மூளைக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய உறுப்புக்களில் ஒன்றாகும்.

மூளைக்கு தேவையான சத்துகிடைக்காவிடின்  முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் அல்லது மனத்தளர்ச்சியால் ஏற்படும் பைத்தியம் (Dementia or Alzheimer’s disease)  என்பவற்றிற்கு இளம்வயதிலேயே ஆளாகவேண்டி வருவதால் உண்ணும் உணவுகளில் மூளைக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களில் குறையில்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

முக்கியமான ஊட்டச்சத்துக்களும் உணவுகளும் 

  • மக்னீசியம் (magnesium) - பசளிக்கீரை,வாழைப்பழம்,பூசனிக்கா விதை,கறுத்த சொக்கலேட்,ஷாட்(Chard),யோகட்,கறுப்பு நிறமான பீன்ஸ் விதைகள்,பாதாம் பருப்பு,அத்திப்பழம்(Figs)
  • ஒமேகா 3 அமிலம் - 
    • இவை கூடுதலாக  மீன்வகைகளில் காணப்படும்  மக்கரல்,டூனா,சலமன் 
    • பருப்பு வகைகள் -  வால் நட் (ஆர்குட்),பிஸ்தா,பாதம்
  •  அவுரி நெல்லி  (Black Berry)    இதில்  உள்ள ஊட்டச்சத்தானது மூளையின் நரம்பு மண்டலங்களுக்கிடையேயான தகவல் பரிமாறும் இணைப்பினை பலமடையச்செய்கிறது.
  • க்ரீன் டீ -  இதில் உள்ள ஊட்டச்சத்துக்களானவை நேய்களை விரட்டியடிப்பவையாகும் தன்மையையும் மூளை நரம்புகளுக்கிடையேயான தொடர்பினை ஊக்கிவித்து ஞாபகசக்கிக்கு வழிவகுக்கிறது.


  • நாட்பட்ட நோய்களான இருதய அடைப்பு,நீரழிவு போன்ற நோய் உள்ளவர்கள் உணவுவிடயத்தில் வலு கவனமாக இருப்பார்கள் மறைமுகமாக இவர்களின் உணவானது மூளைக்கு சக்தியளிப்பதாக  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

அவுரி நெல்லி
அவுரி நெல்லி



க்ரீன் டீ
க்ரீன் டீ



No comments:

Post a Comment