Sunday, June 21, 2015

கல்லீரலை ஊறு செய்யும் பழக்கவழக்கம் Liver damaging habits

நல்ல ஓய்வும் 
நல்ல நித்திரையும்  (தூக்கம்)

கல்லீரலையும் மற்றை உறுப்புக்களை பாதுகாப்பது ஓர் உன்னத பழக்கவழக்கமாகும் .

ஆனால் உங்களால் நன்றாக தூங்க முடியவில்லை ,மன உலைச்சல் என்பன இருந்தால் உங்கள் உடம்பில் ஏதோ வெரு தேவையில்லாத நச்சுப் பொருள் உடம்பினுல் ஊடுருவி அது ஆட்டிப்படைக்கிறது என்பதை  தெளிவாக விளங்கிக்கொள்ளலாம்.

கல்லீரல்
கல்லீரல்  (Liver)

கல்லீரலை பாதிக்கும் நமது அன்றாட பழக்கவழக்கங்கள்

  1. இரவில் அதிக நேரம் கண்விழித்திருத்தல்,
  2. மதியம் வரைக்கும் தூங்குதல் .
  3. காலையில் எழுந்தவுடன் சிறுநீர் கழிக்காமை.
  4. கட்டுப்பாடில்லாமல் அதிகம் சாப்பிடுதல்.
  5. காலைச்சாப்பாட்டை தவிர்த்தல்.
  6. தேவையில்லாமல் அதிக மருந்து மாத்திரைகளை பாவித்தல்.
  7. பக்கற்றில் அடைத்த உணவு,செயற்கை சுவையூட்டப்பட்ட உணவு வகைகள், ஆகியவற்றை அதிகம் உட்கொள்ளல்.
  8. உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதல் செய்யும் சமையல் எண்ணெய்களை  உபயோகித்தல் , தேங்காய் எண்ணெய்,ஒலிவ் எண்ணெய்    போன்ற வற்றை தவிர்த்தல்.
  9. அதிக மது பாவனை,புகை பழக்கம்
  10. பொரித்த உணவுகளை களஞ்சியப்படுத்தி உண்பது.
  11. சில காய் கறிகளை பச்சையாகவே  உண்பது.
ஏன்?  இதை எல்லாம் சொல்லுகிறீர்கள், இது சாதாரண விடயம் தானே  என்று நினைத்தீர்கள் என்றால்,?
விளக்கம் அறிய  தொடர்ந்து வாசியுங்கள்.

இயற்கையாக கிடைக்கபெற்ற உடம்பில் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தில் என்னென்ன வேலையை எப்ப ஆரம்பிக்கனும் எப்ப முடிக்கனும் என்ற ஒரு நேரசூசி உள்ளது இதனை எவராலும் மாற்ற முடியாது .

எப்படி எனில்,  

உதாரணமாக  படுக்கைக்கு போக முன் காலையில் குறித்த நேரத்திற்கு எழும்பவேண்டும் என்று நினைத்து தூங்கினால் காலையில் கடிகாரத்தின் அலாரம் அடிக்கமுன் எழுந்துவிடுவோம் ஏப்படி? சாத்தியம் என்று நினைத்ததுண்டா ?

சில முக்கிய விளக்கம் கீழே

உடம்பில் ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தின் நேரத்தின் பிரகாரம் 
  1. இரவு 9-11 மணிக்கிடையில் நடப்பவை,
    1. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அகற்றும் தொழிற்பாடு நடைபெறும் நேரமாகும் இவ் நேர இடைவெளியில் 
      • செய்யவேண்டியவை
        1. ஓய்வெடுத்தல்
        2. மனதுக்கு இனிமையான இசை,பாட்டு என்பவற்றைக் கேட்டல்
      • செய்யக் கூடாதவை
        1. வீடு கூட்டுதல்
        2. சமையல் பாத்திரங்கள் கழுவுதல்
        3. பிள்ளைகளின் வீட்டு வேலைகளை கவனித்தல்
  2. இரவு 11- 1மணிக்கிடையில் நடப்பவை,
    1. கல்லீரலின் வேலை நடைபெறும் நேரமாகும் இவ் நேர இடை வெளியில் 
      • செய்யவேண்டியவை
        1. நல்ல தூக்கம் 
        2. காற்றோட்டம் உள்ள இடமாக்குதல்
      • செய்யக் கூடாதவை
        1. விழித்திருத்தல்
        2. உடலை வருத்தும் வேலையில் ஈடுபடல்.
  3. விடியற்காலை  1-3 மணிக்கிடையில் நடப்பவை
    1. பித்தப்பையின் தொழிற்பாடு நடைபெறும் நேரமாகும் , இவ்வேளையில் ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருப்போம்
  4. விடியற்காலை  3-5 மணிக்கிடையில் நடப்பவை
    1. நுரையீரல் சுத்திகரிப்பு தொழில் நடைபெறும் நேரமாகும் இந் நேர இடைவெளியில் இருமல் ,சளி ,தும்மல் போன்றவை ஏற்படும் இவற்றுக்கு மருத்துவம் தேவையில்லை சிறிது நேரத்தில் தானாகவே குணமாகும்
  5. விடியற்காலை  5-7 மணிக்கிடையில் நடப்பவை
    1. குடலில் உள்ள கழிவுகளை அகற்றும் வேலை நடைபெறும் நேரமாகும்,கட்டாயம் மலம்கழித்தே ஆகவேண்டும்
  6. காலை  7-9 மணிக்கிடையில் நடப்பவை
    1. சிறுகுடல் ஊட்ச்சத்துக்களை அகத்துறிஞ்சும் வேலைகளை செய்யும் நேரமாகும்,இவ் நேர இடைவெளியில் 
      • செய்யவேண்டியவை
        1. காலை உணவை காலை 7-7:30 மணிக்கிடையில் எடுத்தல்
        2. எண்ணெய் உணவுவகைகளை  பெரும்பாலும் தவிர்த்தல்
      • செய்யக் கூடாதவை
        1. காலை உணவை காலை 6:30 மணிக்கு முதல்  எடுத்தால்  நாளடைவில் குடல் சம்பந்தமான நோய்களுக்கு ஆளாகலாம்
நாம் எல்லோருக்கும்  நல்ல பழக்க வழக்கங்களுடன்  உணவுன்று வாழ ஆசைதான் ஆனால் நாம் காலத்துடன் விளையாடுகிறேம், உடம்பானது விளையாட்டுடன் காலத்தை கழிக்கிறது

முக்கியமாக உடம்பிற்கு ஓய்வு கொடுங்கள், நன்றாக நேரத்துடன் தூங்குங்கள்  கல்லீரல் பாதுகாக்கப்படும்

No comments:

Post a Comment