Sunday, June 7, 2015

தலாய் லாமாவின் மனிதன் யார்? Who is human ?

அன்மையில் நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டகேள்விக்கு ஆனது

 மனிதன் யார்?

விளங்கப்படுத்துவது எப்படி ?

என்று தெரியாமல் இணையத்தில் தேடுகையில் தலாய் லாமா என்ற திபேத் நாட்டு பௌத்த துறவியின் தற்போதைய மனிதன் யார் என்ற கருத்தை உங்களிடம் பகிர்கையில் மகிழ்ச்சியடைகிறேன்.

அவர் சொல்லுகிறார் மனிதனைப்போல் ஆச்சரியபடத்தக்கக்கூடி ஓர் விஷேட உயிரினமாகும் ஏனெனில்,

முக்காலம் இருப்பதை நன்கு அறிந்தவன் (இறந்த காலம் நிகழ்காலம் எதிர் காலம்) ஆனால் பணம் என்னும் விடயத்தில்,

தற்போதைய மனிதன் எப்படி உள்ளான் என்பதை சிறு சிந்தனை மூலம் விளக்கம்கொடுத்திருந்தார்.

  • அவன் பணம் சம்பாதிப்பதற்காக
    • ஆரேக்கியம்
    • குடும்பம்
    • அவமானம்,தன்மானம்
    • பொய் சொல்லுதல்
    • சிநேகிதம்
போன்ற வற்றை தியாகம் செய்கிறான்,
தியாகம் செய்தவற்றை மீண்டும் பெற சம்பாதித்த பணத்தை (செல்வம்) தியாகம் செய்கிறான் ( உ-ம் : மருத்துவம்,கடன், குடும்ப ஒற்றுமை .....)

  • நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணி கனவுலகில் மிதக்கிறான் இதனால்  (உ-ம் : கடன்,மாளிகை போன்ற வீடு, வாகணம்  ...)  நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் நிம்மதியாக வாழமுடியாமல் தவிக்கிறான் .
  • தனக்கு இறப்பே இல்லை என்ற இறுமாப்புடன் நீதி தவறி வாழ்கிறான் ஆனால் இறுதியில் வாழாமலே சாகிறான்
இதுதான தலாய் லாமாவின் தற்போதை மனிதன் என்பதற்கான அவரின் விளக்கம் முடிந்தால் நீங்களும் உங்களுடைய கருத்தை Comments box ஊடாக இவ்வுலகிற்கு தெரியப்படுத்தவும் .

 மனிதன் யார்?
தலாய் லாமா





No comments:

Post a Comment