Monday, June 29, 2015

புற்றுநோய் தோற்றத்தில் ஈடுபடும் காரணிகள் -Reason for Cancer

இந்நோய் உருவாகுவதற்கு என்ன காரணங்கள் என அறிதல்,இதைத் தடுப்பதற்கு உதவும் கலத்தில் அடிப்படையில் எம்மூலகாரணத்தால் உருவாகின்றது என கண்டுபிடிக்கப்படவில்லையாயினும் இதன் தோற்றத்தில் ஈடுபடும் அல்லது பங்களிக்கும் பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன இவற்றை
  1. பொதுவான காரணிகள் (General Factors) எனவும்.
  2. குறிப்பான காரணிகள் (Specific Factors )எனவும் பிரிக்கலாம்.

பொதுவான காரணிகள்

  1. பரம்பரைக் காரணி (Genetic or Hereditary)
    • புற்றுநோய் பரம்பரையாக தோற்றுவதில்லை என்பது (சில மிக அரியவகைகளை விட) உறுதியாக தெரிந்ததே. மிகஅரிய வகைகளும் மிகவும்  குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன.சிலருக்கு புற்றுநோய் உருவாகுவதற்கு பரம்பரையை சேர்ந்ததல்லாத அதிக வாய்ப்புக்கள் (Prides position) இருப்பதால் வேறு காரணிகள் இவர்களில் இலகுவில் புற்றுநோயை தோற்றுவிக்கக் கூடும். புற்றுநோய் குடும்பத்தில் ஒருவருக்கு ஏற்பட்டால் மற்றோருக்கும் ஏற்படுமென அச்சம் கொள்ளத் தேவையில்லை (ஒரே வகையான புற்றுநோய்க்கு மாத்திரம்)
  2. வைரசுக்கள்(Viruses)
    • இவை மிருகங்களில் புற்றுநோயை உருவாக்குவதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருப்பின், மனிதரில் மிகச் சில வைரசுக்களே இதற்கு காரணமாக உள்ளன (உ-ம்: கெப்பறைரிஸ் பி வைரஸ் Hepatitis B Virus ,எப்ஸ்ரையின் பார் வைரஸ் Epstein Barr Virus  இவை ஈரலிலும் மூக்குத்தொண்டையிலும் நிணகணுக்களிலும் புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
  3. ஓமோன்கள் (Hormones)
    • இவற்றால் உண்டாகும் சில புற்றுநோய்கள், சில அங்கங்களில் சிலரில் மட்டுமே ஏற்படுகின்றது 
      • உ-ம்: மார்புப் புற்றுநோய் (Breast) புறொஸ்ரேற் (Prostate) கருப்பை புற்றுநோய்(Cervix
  4. அதிகளவு மன நெருக்கம் (Mental Stress)
    • இதனால் ஓமோன்கள் சுரக்கப்பட்டு இவை காரணமாக அமையலாம் ஆனால் இன்னும் இதற்கு போதியளவு ஆதாரங்கள் இல்லை
  5. புற்றுநோயை உருவாக்ககூடிய பதார்த்தங்கள் (Carcinogenic Agents)
    • இவை பெரும்பாலும் பௌதீகம் (Physical) அல்லது இரசாயண (Chemical)பதார்த்தங்கள்.இவை பெரும்பாலும் குறிப்பிட்ட சில தொழில்களைச் செய்பவர்களை பாதிக்கிறது
  • பௌதீக காரணிகள்
காரணி
தொழில்
நோய் எழும் அங்கம்
அயனியாகும் கதிர் வீசல்
Ionizing Radiation
ரேடியம் சுரங்கம்>மருத்துவம்சிகிச்சை> ஆய்வு நிருமாணித்தல்
இயற்கை (சூரியன்)
மருத்துவம்-சிகிச்சை
பைப் புகைத்தல்(pipe)
எலும்பு>தோல்
வெண்கலம்>
மூளை>மார்பு>
பெருஙகுடல்>கேடயச் சுரப்பி  (Thyroid)                     
பிற ஊதாக்கதிர்கள்  
(Ultra violet Radiation )
இயற்கை (சூரியன்)
மருத்துவம்-சிகிச்சை
தோல்
வெப்பக் கதிர்கள்  (Thermal)
பைப் புகைத்தல்  (Pipe)
உதடு >வாய்



இரசாயனக் காரணிகள்


புகைக்கரி>கரித் தார்>தாது எண்ணை
சுரங்கம்
நுரையீரல்>தோல்
அறேமற்றிக் அமின்ஸ் 
(Aromatic Amine)
சாயம் தொகுப்பு
சிறு நீர்ப்பை
நப்தலமின்ஸ்
(Naphtali Mines)
ரப்பர் கயிறு
சிறு நீர்ப்பை
வெப்பத்தார்>
அஸ்பெஸ்ரோஸ்(Asbestos)
குறேம் உலோகத்தாது
 (Chrome Ore)
நிக்கல் உலோகத்தாது 
 (Nickel Ore)
சுரங்கம்
நுரையீரல்
மரத்தூசி>ஐசோபுரோபிலீன் (Iso propylene)
நிக்கல் உலோகம் தாது
மர வேலை >தோல் பதனிடுதல்>
சுரங்கம்
நாசிக்குடா  
(Nasal Sinuses)
போலிவீனைல் குனோறைட்(PVC)
தாயரித்தல்
ஈரல்
கிருமிநாசினிகள்
துணி தாயரித்தல்
கமம்>தயாரித்தல்
சிறு நீர்ப்பை> நாசிக்குடா>நுரையீரல்
  • பூஞ்சணத்தில் உள்ள அப்ஃளா ரொக்சின் (Aflatoxin) உணவு வகைகளில் (பனம்மா ,பனங் கிழங்கு,நிலக்கடலை)சேர்ந்து ஈரலில் நோய் ஏற்படுத்தும்.
இக்காரணிகள் யாவரையும் பாதிப்பதில்லை நோய் ஏற்படுவது குறிப்பிட்ட காரணியின் பாதிப்புத்தன்மை காரணியின் விசை அல்லது அளவு, உடலைத்தாக்கிய நிலை முதலியவற்றில் தங்கியுள்ளது.
  • நீடித்த காலமாக உடலைப்பாதித்து வரும் நோய்கள்
    • சில சாதாரணமான நோய்களும் நீடித்தகாலமாக உடலைப்பாதிக்கும்போது புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன
      •  உ-ம்: தோலில் ஏற்படும் புண்கள்,சிறு நீரகத்தில் அல்லது பித்தப்பையில் கற்கள்,இரும்புச்சத்து குறைவால் உண்டாகும் இரத்தச்சோகை,மதுவால் உண்டாகும் ஈரல் சுருங்கள் (Cirrhosis) முறையே வாய்,களம்,ஈரல் என்பவற்றில் புற்று நோய்க்கு வழிவகுக்கலாம்
  • சில தீங்கற்ற வளர்ச்சிகள் 
    • உ-ம்: பப்பிலோமா(தோலில் ஏற்படும் தீங்கற்ற வளர்ச்சி), வாயில்,ஆண் உடம்பில் ஏற்படும் வெண் தடிப்பு (Leukemia),சில காலத்தில் தீயவளர்ச்சியாக மாறலாம்.
  • குறிப்பான காரணிகள்
    • உணவில் உயிர்ச்சத்து ஏ,இரும்புச்சத்து என்பனவற்றின் பற்றாக்குறைவு- வாய்,களம்,இரப்பை என்பவற்றில் புற்றுநோய் தோன்றும் வீதத்தை அதிகரிக்கலாம்
    • அதிகளவில் கொழுப்புச்சத்தையும் (பிரதானமாக விலங்கு கொழுப்பு) அதிகளவு புரதத்தையும் உட்கொள்வதால் ,பெருங்குடல்,கருப்பை ,மார்பு,சிறு நீரகம் என்வற்றில் புற்றுநோய் வீதம்அதிகரிக்கின்றது.ஆனால் எமது நாட்டில் செல்வந்தரைத் தவிர ஏனையோருக்கு இது காரணமல்ல
    • நார்த்தன்மை குறைந்த உணவு பெருங்குடலில் நோயை ஏற்படுத்தலாம்.இதுவும் எம்நாட்டில் அரிதாகவே காரணமாகும்.
    • அதிக காப்பி அருந்துவது அதுவும் புகைத்தலுடன் சேர்ந்தால் சதையி,சிறுநீரகம் ஆகியவற்றில் புற்றுநோயை உண்டாக்கலாம்
    • பூஞ்சணம் பிடித்த பனம் கிழங்கு, பனம் மா , நிலக்கடலை தொடர்ந்து பாவித்தால் ஈரல் புற்றுநோய் ஏற்படும்
    • அதிகளவில் உப்பை கொண்ட மீன் சாப்பிடுதல் களத்தில் புற்றுநோயை ஏற்படுத்தலாம்
    • செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களுக்கு சேர்க்கப்பட்ட சில பதார்த்தங்கள்- ஈரல்,இரப்பை,சிறுநீரகம் என்பவற்றில் புற்றுநோய் வீதத்தை அதிகரிக்கலாம்
    • மிகவும் சூடான உணவு உட்கொள்வதால் வாய்க் குழியிலும் களத்திலும் புற்றுநோய் வாய்ப்பு அதிகரிக்கலாம்
    • கறிகளுக்கு சேர்க்கப்படும் சரக்குகள் அதிகவாயின் வாய்க்குழி,களம்,இரப்பை ஆகியவற்றின் புற்றுநோய் தோன்றும் வீதத்தை அதிகரிக்கலாம்
  • புகைத்தல்
    • புகைத்தல்-புகையிலுள்ள நிக்கொட்டின் எனும் பதார்த்தம்,புகையிலை எரியும்பொழுது உண்டாகும் வேறு பதார்த்தங்களும் நுரையீரலிலும் வேறு அங்கங்களிலும் புற்றுநோயை உண்டாக்கலாம்.பாதிக்கும் தாக்கச் சந்தர்ப்பம் ஒருவர் புகைக்கும் அளவு , நிக்கொட்டின் அளவு,புகைத்தலுடன் மதுபாணம் பாவித்தல்  என்பவற்றில் தங்கியுள்ளது
  • மதுபாணம்
    • பெரும்பாலும் வாய்க்குழி,களம்,ஈரல்,சிறுநீர்ப்பை என்பவற்றில் காரணியாகலாம்.புகைத்தலும் சேர்ந்தால் தாக்கச் சந்தர்ப்பம் அதிகரிக்கும்
  • வெற்றிலை சாப்பிடுதல்
    • வாய்க்குழியில் புற்றுநோய் ஏற்படலாம் ,வெற்றிலையுடன் சேர்க்கும் புகையிலையே முக்கிய காரணமாகும்.சக்கையை பலநேரம் வாய்குழியில் வைத்திருப்பதும் காரணமாகும்.சக்கையை,சாறை விழுங்குவதாலும் களத்திலும், இரப்பையிலும் புற்றுநோய் ஏற்படலாம்.எம் நாட்டில் ,வாய்க்குழி,களம்,இரப்பை புற்றுநோய் மிக மிக அதிகம்.எனவே இவ்வழக்கம் முற்றாக நிற்க வேண்டும்.நிற்பாட்ட முடியாதோர் மிக குறைந்த அளவில் புகையிலை சேர்க்காமல் பலநேரம் வாயக்குழியில் வைக்காமல் சாப்பிடவேண்டும் சக்கையை சாறை விழுங்கப்படாது
  • முன் கூறிய பொது காரணங்களின் அமைப்பில் தொழில்,சுற்றாடல் சம்பந்தப்பட்ட காரணிகள்.
  • சில மருந்துகள்
    • மிகமிக சில மருந்துகள் தொடர்ந்து சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் சந்தர்ப்பம் உண்டாகின்றது

No comments:

Post a Comment